வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக நடத்திய தொடர் போராட்டத்திற்கு எந்த தீர்வு கிடைக்காத நிலையில், தங்களின் பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறிய தயாரகிய மல்யுத்தவீரர்களிடம் விவசாய சங்கத்தின் தலைவர் நரேஷ் திகேத் தலைமையில் சமரசம் பேசினர். மல்யுத்த வீர்ர்களின் பதக்கங்களை பெற்றுக்கொண்டு 5 நாட்களில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதனால் தற்காலிகமாக மல்யுத்த வீரர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து, கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், மற்றும் வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக புதுடில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து பிரிஜ் பூஷன் மீது டில்லி போலீசார் எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்தனர்.
இதிலும் திருப்தி ஏற்படாததால், பிரிஜ் பூஷன் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதற்கிடையே நேற்று இரவு போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இனி டில்லி ஜந்தர்மந்தர், மற்றும் இந்தியா கேட் பகுதிகளில் அமர்ந்து போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் என தடை விதித்தனர்.
இதனால் விரக்தியடைந்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள், தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக அறிவித்தனர்
இதையடுத்து இன்று மாலை உத்தர்கண்ட் மாநிலம் ஹரிதுவார் கங்கை நதியில் பதக்கங்களுடன் ஒன்று கூடினர். பதக்கங்களை வீசி எறிய வந்தனர்.. அதற்கு முன்னதாக கண்ணீர் வீட்டு அழுதனர்.
முன்னதாக பஜ்ரங் புனியா கூறுகையில், இனிமேலும் எங்களுக்கு பதக்கங்கள் தேவையில்லை. கடுமையான உழைப்பால் கிடைத்த பதக்கங்களை புனித நதியான கங்கை நதியில் வீசுகிறோம். பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசினால் சிறையில் அடைக்கிறார்கள் எனக்கூறியுள்ளார். இந்த நிலையில் விவசாய சங்கத்தினர் மல்யுத்த வீரர்களை சமரசபடுத்தியுள்ளனர்.மேலும்
மல்யுத்த வீர்ர்களின் பதக்கங்களை பெற்றுக்கொண்டு 5 நாட்களில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர் இதனையடுத்து மல்யுத்த வீரர்கள் கலைந்து சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement