நாட்டுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களை நிறுத்த முயல்பவர்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெளியிடுவேன் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட சலுகைச் சட்டம் உள்ளதாகவும், அதன் கீழ் அனைத்தையும் வெளிப்படுத்தும் உரிமை இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், 2017ஆம் ஆண்டு முதல் மேற்கொள்வதற்கு இடமளிக்காத திட்டங்கள் மற்றும் அவற்றிற்கு தடைவிதிக்கும் நபர்கள் குறித்தும் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று தான் கருதுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.