Anupama Parameswaran: நிச்சயார்த்த அறிவிப்பை வெளியிட்ட 'பிரேமம்' பட நடிகை: ஆனால், அதில் ஒரு ட்விஸ்ட்.!

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன். ‘பிரேமம்’ படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தனக்கு நிச்சயார்த்தம் முடிந்து விட்டதாக தனது சோஷியல் மீடியாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ‘பிரேமம்’. தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ என்ற படத்தில் நடித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ், மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது போட்டோ ஷுட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவிப்பது வழக்கம்.

நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் திடீர் அனுமதி: வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனக்கு நிச்சயார்த்தம் முடிந்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறாது. அதில், தனது கையில் பிளாஸ்டிக் கவர் ஒன்றை மோதிரம் போல் மாட்டிக்கொண்டு தனக்கு திருமண நிச்சயார்த்தம் முடிந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்.

அனுபமா பரமேஸ்வரன் காமெடியாக பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை குவித்து வருகின்றனர். அனுபமா பரமேஸ்வரனை இன்ஸ்டாகிராமில் 13 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Ashish Vidyarthi: இரண்டாம் திருமணம் செய்தது ஏன்.?: உண்மையை போட்டுடைத்த ஆஷிஷ் வித்யார்த்தி.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.