பீஜிங், விண்வெளியில் உள்ள தன் ஆராய்ச்சி மையத்துக்கு முதல் முறையாக, ‘சிவிலியன்’ எனப்படும் பொதுமக்களில் ஒருவரை அனுப்பி சீனா புதிய சாதனை படைத்துள்ளது.
ரஷ்யா உட்பட ஏழு நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவியுள்ளன. இதன் ஆயுட்காலம் 2030ல் முடிகிறது.
இந்நிலையில், விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதற்காக தனக்கென தனியாக ஆராய்ச்சி மையத்தை நம் அண்டை நாடான சீனா உருவாக்கி வருகிறது.
இதன் கட்டுமானம் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை, சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது.
இதன்படி, மூன்று பேர் அடங்கிய குழுவினர், வடமேற்கு சீனாவின் ஜியாகுயான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள், ‘லாங் மார்ச் – 2 எப்’ என்ற ராக்கெட்டில் பொருத்தப்பட்ட ‘ஷென்ஷூ – 16’ என்ற விண்கலம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வழக்கமாக விண்வெளிக்கு, ராணுவத்தைச் சேர்ந்தவர்களையே சீனா அனுப்பி வந்துள்ளது. முதன்முறையாக, சிவிலியன் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார்.
பீஜிங்கில் உள்ள பெய்ஹாங் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் குய் ஹய்ச்சோ இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இந்தக் குழுவினர், விண்வெளியில் ஐந்து மாதங்களுக்கு தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement