சென்னை: நடிகர் விஜய் தளபதி 68 படத்துக்கு 200 கோடி சம்பளம் வாங்கப் போகிறார் என்பது தான் சமீபத்தில் இந்திய திரையுலகையே ஆட்டி படைத்தது.
இந்நிலையில், அதை விட இன்னொரு வியப்பான தகவல் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தெலுங்கு படத்தில் வெறும் 20 நாட்கள் நடிக்க 150 கோடி சம்பளம் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபாஸுக்கு வில்லன்: விக்ரம் படத்தில் நடித்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்தில் வெறும் வாய்ஸ் ஓவர் கொடுத்து அசத்தினார். இந்நிலையில், நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான படமான ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறாராம் கமல்ஹாசன்.
அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்த படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் கமல் என்கிற ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன.
150 கோடி சம்பளம்: இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என முடிவு செய்த இயக்குநர் நாக் அஸ்வின் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி பெருந்தொகைக்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை ஹீரோவாகவே நடிகர் கமல்ஹாசன் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்காத நிலையில், வெறும் 20 நாள் கால்ஷீட்டுக்காக அவருக்கு 150 கோடி ரூபாய் பேசப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் ஒட்டுமொத்த திரையுலகையே ஷாக்கில் ஆழ்த்தி உள்ளது.
உண்மையா? உருட்டா? நடிகர் விஜய்க்கு தளபதி 68 படத்தில் 200 கோடி சம்பளம் என சில தினங்களுக்கு முன்பாக வெளியான தகவல்களை தயாரிப்பு நிறுவனமோ விஜய் தரப்போ மறுக்கவில்லை. லியோ படத்தின் பிசினஸ் காரணமாக அத்தனை பெரிய சம்பளம் கொடுப்பது உண்மை தான் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், கமல்ஹாசன் கன்ஃபார்மா பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் அவருக்கு இத்தனை பெரிய சம்பளம் வழங்கப்போவது உறுதியான தகவல் தான் என்கின்றனர். ஆனால், இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.