சென்னை : நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதும் லைகா தயாரிக்கவுள்ளதும் தற்போது உறுதியாகியுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் நீண்ட நாட்களாக தள்ளிப் போன நிலையில், தற்போது அடுத்த வாரத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு பகுதிகளில் தன்னுடைய பைக் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள நடிகர் அஜித்குமார், அதற்குள் சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகருடன் அஜித் எடுத்த லேட்டஸ்ட் கிளிக் : நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் வசூலில் சிறப்பான சாதனையை படைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில பல காரணங்களால், அவர் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி அஜித்தை இயக்கவுள்ளார். இந்தப் படம் குறித்து முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் சூட்டிங் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி படத்தை இயக்கவுள்ளதும் அவர் படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க் மற்றும் லொகேஷன் பார்க்கும் பணிகளை முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேபாளம் உள்ளிட்ட இடங்களில் தன்னுடைய பைக் பயணத்தை மேற்கொண்ட அஜித், தற்போது வயநாடு பகுதிகளில் பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் இன்னும் சில தினங்களில் சென்னை திரும்பவுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்தில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை முதலில் எடுத்துவிட்டு அடுத்ததாக மற்ற காட்சிகளை மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யை தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, அஜித்திற்கு ஜோடியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில தினங்களில் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் அஜித் இருவேறு கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாகவும், ஒரு கேரக்டரில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போது ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்டுள்ள ரீசன்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சமீப காலங்களில் ரசிகர்களுடன் அதிகமாக புகைப்படங்களை எடுத்து வருகிறார் அஜித். ரசிகர்களுடன் இவரை அதிகமாக பார்க்க முடிகிறது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில், அடுத்த வாரத்தில் விடாமுயற்சி படம் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், தற்போது அஜித் மற்றும் ரசிகர்களின் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன.