இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாறா ஹல்டன் ஒபே நுவெரெலியாவிற்கான விஜயமொன்றை நேற்று (30) மேற்கொண்டிருந்தார்.
உயர் ஸ்தானிகர் சாறா ஹல்டன் ஒபே மற்றும் நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, நுவரெலிய மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றுலாத் துறை, விவசாய, கல்வி மற்றும் சமூகமயப்படுத்தல் போன்றன தொடர்பாக இச்சந்திப்பின் போது இருவரும் கலந்துரையாடினர்.
அத்துடன், மாவட்ட செயலாளர் நந்தன கலபட, உயர் ஸ்தானிகர் சாறா ஹல்டன் ஒபே க்கு நினைவுச் சின்னத்தையும் பரிசளித்தார்.