இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Ajith starrer Vidaa Muyarchi: மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படம் குறித்து நல்ல விஷயங்களே வெளியாகிக் கொண்டிருக்கிறது.
விடாமுயற்சிமகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைத்து மே 1ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது லைகா நிறுவனம். படப்பிடிப்பு மே 22ம் தேதி துவங்கும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தான் படப்பிடிப்பை துவங்குகிறார்கள். எனவே தனது பைக்கை எடுத்துக் கொண்டு வயநாட்டுக்கு சென்றுவிட்டார் அஜித்.பிச்சைக்காரன் 2பிரம்மாண்டமாக நடைபெற்ற பிச்சைக்காரன்-2 வெற்றி விழாபைக்பைக்கில் உலகம் சுற்ற வேண்டும் என்பது அஜித் குமாரின் ஆசை. அந்த பயணத்தை ஏற்கனவே துவங்கிவிட்டார். ஆனால் ஒரே நேரத்தில் அனைத்து நாடுகளுக்கும் செல்ல முடியாது அல்லவா?. அதனால் பிரேக் எடுத்து, பிரேக் எடுத்து செல்கிறார். வரும் நவம்பர் மாதம் மீண்டும் உலக டூர் கிளம்புகிறார் அஜித் குமார். அதற்கு பரஸ்பர மரியாதை பயணம் என பெயர் வைத்திருக்கிறார்.
Yashika: யாஷிகாவும், அஜித் மச்சானும் எங்கு, எப்படி சந்தித்து காதலித்தார்கள்?
ஷூட்டிங்அஜித் நவம்பர் மாதம் கிளம்புவதால் அதற்குள் விடாமுயற்சி பட வேலையை முடிக்கவிருக்கிறார் மகிழ்திருமேனி. நவம்பர் வரை பட வேலையை நடத்த வேண்டாம். நான் அக்டோபர் மாத்திற்குள்ளேயே முடித்து விடுகிறேன் என அஜித் குமாரிடம் கூறியிருக்கிறாராம் மகிழ்திருமேனி. அஜித் எதிர்பார்த்ததை விட தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார் மகிழ்திருமேனி. இது அஜித் குமாரை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறதாம்.
த்ரிஷாவிடாமுயற்சி படத்தில் த்ரிஷா தான் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறாராம். லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth: ரஜினி ரிடையர் ஆகிறாரா?: உண்மையை சொன்ன அண்ணன் சத்ய நாராயண ராவ்
காஜல் அகர்வால்ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வால். அவரை தான் விடாமுயற்சி படத்தின் ஹீரோயினாக்குமாறு லைகா நிறுவனம் மகிழ்திருமேனியிடம் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் த்ரிஷாவை ஹீரோயினாக்கியிருக்கிறார்கள். என்னை அறிந்தாலை அடுத்து விடாமுயற்சியில் அஜித் ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா.
Ajith: அந்த காரணத்தால் தான் அஜித்தை அஜித் சார்னு அழைக்கிறேன்: ராதாரவி
அனிருத்விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதனால் பாடல்கள் எல்லாம் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார். அனிருத் இசையமைப்பார் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள். விக்னேஷ் சிவனை நீக்கியதால் அனிருத்தும் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை.
கெட்டப்விடாமுயற்சியில் முன்பு எப்பொழுதும் பார்த்திராத வகையில் அஜித் குமாரை வித்தியாசமான கெட்டப்பில் காட்டப் போகிறாராம் மகிழ்திருமேனி. இந்த படத்திற்காக ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யத் துவங்கிவிட்டாராம் அஜித். அவரை ஃபிட்டாக பார்த்தாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். விடாமுயற்சியில் செம ஃபிட்டான அஜித்தை பார்க்கலாமாம். விடாமுயற்சி பட வேலையை அக்டோபரில் முடிக்க திட்டமிட்டாலும் படத்தை அடுத்த ஆண்டு கோடையின்போது தான் ரிலீஸ் செய்வார்களாம்.