மத்தியப் பிரதேசத்தில் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு அரசு செலவில் முக்கியமந்திரி கன்யா திட்டத்தின் கீழ் இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த வகையில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் ஜபுவா மாவட்டத்தில் 296 ஜோடிகளுக்கு நேற்று பிரமாண்டமாய் திருமணம் நடைபெற்றது.
இந்த விழாவில் மணப்பெண்களுக்கு பரிசாக அரசு சார்பில் மேக்கப் கிட் வழங்கப்பட்டன. அந்த மேக்கப் கிட்டை ஆசையோடு திறந்து பார்த்த மணப்பெண்கள், அதில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள ஜபுவா மாவட்ட ஆட்சியர், தன்வி ஹுடா, மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேக்கப் கிட் வழங்கப்படவில்லை. ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் விழிப்புணர்வுக்காக சுதாகரத்துறை சார்பிஙல் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவை மேக்கப் பாக்ஸில் வைக்கப்படவில்லை என்றும் தனியாகதான் திருமண ஜோடிகளுக்கு வழங்கப்பட்டது என்றும் கூறினார். இருப்பினும் இது தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் இதுவரை வரவில்லை என்றும் ஜபுவா மாவட்ட ஆட்சியர் தன்வி ஹுடா தெரிவித்துள்ளார்.
சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என கணக்கு காட்டியவர்கள்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள, காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ராந்த் பூரியா, எல்லாவற்றுக்கும் நேரமும் இடமும் இருக்கிறது. குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வை நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் திருமண நிகழ்வில் ஆணுறையும் கருத்தடை மாத்திரைகளும் வழங்கப்பட்டது சரியல்ல என்று கூறியுள்ளார்.