முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர்களுடன் இணைந்து அண்மையில் கொன்வெவ மகா வித்தியாலயம் மற்றும் குருநாகல் ஆர்ஜி சேனநாயக்க மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஆகியவற்றின் 70 மாணவர்களுக்கு ‘ஹரித நியமுவோ’ (பசுமை முன்னோடி) என்ற தொனிப்பொருளில் செயலமர்வை (27) வயம்ப பயிற்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
பசுமை விவசாயத் துறையில் வெற்றிகரமான தலைவர்களாக மாறுவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அறிவைக் கொண்டு மாணவர்களை அறிவூட்டுவதற்காக இந்தப் பட்டறை வடிவமைக்கப்பட்டிருந்தது. முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் உடற் பயிற்சி, கோட்பாட்டு மற்றும் நடைமுறை குழு நடவடிக்கைகளை உள்ளடக்கிய தலைமைத்துவ அமர்வுகளை நடாத்தினர். மாணவர்களின் தலைமைத்துவத் திறனை வளர்த்துக்கொள்ளவும், பசுமை விவசாயம் குறித்த அறிவை மேம்படுத்தவும் இந்த செயலமர்வுகள் அவசியமானவையாக அமைந்தது.
பயிலரங்கின் போது உணவு பாதுகாப்பு, வானிலை மாற்றங்கள், உரம், நீர்ப்பாசனம், சூரிய ஒளி காரணிகள், உலகளாவிய உணவு பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பசுமை விவசாயத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பங்கேற்பாளர்கள் அறிந்து கொண்டனர். பயிலரங்குகள் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவும், அவர்களின் சமூகங்களில் தலைவர்களாகவும் அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
இந்த செயலமர்வின் வெற்றியில் முதலாவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் முக்கிய பங்காற்றினர். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 143 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் முதலாவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரால் இத்திட்டம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது. மேலும்இ படையினர் மாணவர்களுக்கு மதிப்புமிக்க வழிகாட்டல் மற்றும் ஆதரவை வழங்கினர்இ பசுமை விவசாயத் துறையில் வெற்றிகரமான தலைவர்களாக மாறுவதற்குத் தேவையான திறன்களையும் அறிவையும் மேம்படுத்த உதவினர்.
இதேவேளை 143 வது காலாட் பிரிகேடின் 16 வது கஜபா படையணியின் படையினர் மே 20-21 இல் சிலாபம் ஸ்ரீ சுஜாதா கல்லூரியில் 23 மாணவ தலைவர்களுக்கான ‘தலைமைத்துவம்’ தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப் செயலமர்வினை நடாத்தினர். இது 143 வது காலாட் பிரிகேடின் கட்டளையின் பேரில், 16 வது கஜபா படையணி கட்டளை அதிகாரியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்த செயலமர்வுகள் தலைமைத்துவ திறன்கள் மற்றும் நுட்பங்கள் மற்றும் குழுப்பணியின் முக்கியத்துவம், தகவல் தொடர்பு, நுட்பங்கள், ஒழுக்கம் மற்றும் வாழ்க்கையில் சவால்களை எவ்வாறு சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பதை கொண்டிருந்தது.