மும்பை: இதுவரை ராமாயண் எனும் 10 மாடி குடியிருப்பில் தனது பெற்றோர் உடன் வசித்து வந்த லிங்கா பட நடிகை சோனாக்ஷி சின்ஹா தற்போது தனியாக மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடல்ட் ஆகி விட்டது ரொம்பவே கஷ்டமாக இருக்கு தனியாக ஒரு வீட்டை கட்டி ஆள்வது என்பது மிகவும் சிரமம் என புது வீட்டில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து போஸ்ட் போட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் சோனாக்ஷி சின்ஹா அதன் காரணமாகவே தனி வீடு வாங்கி உள்ளாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
லிங்கா பட ஹீரோயின்: பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா சல்மான் கானின் தபங் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தபங் படத்தின் 3 பாகங்களிலும் இவர் தான் சல்மான் கானுக்கு ஜோடி. மேலும், ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் ஹீரோயினாக நடித்து இருப்பார் சோனாக்ஷி சின்ஹா.
கடலை பார்த்தபடி பிரம்மாண்ட வீடு: தனது தந்தை சத்ருகன் சின்ஹா மற்றும் தாயாருடன் வசித்து வந்த சோனாக்ஷி சின்ஹா தற்போது மும்பையில் கடலை பார்த்த படி பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெரிய போர்ஷனை வாங்கி குடி புகுந்துள்ளார்.
முன்னதாக அவர் பெற்றோர் உடன் இருந்த ராமாயண எனும் வீட்டின் விலையே 74 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியான நிலையில், இந்த குடியிருப்பின் விலை மட்டும் 80 கோடிக்கும் அதிகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சிங்கிளா கஷ்டப்படுறாரு: 35 வயதாகும் இந்த டபுள் எக்ஸ்எல் பட நடிகை இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. சமீப காலமாக ஜாகீர் இக்பால் எனும் சக நடிகருடன் டேட்டிங் செய்து வருகிறார் என காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில், பெற்றோர்களுக்கு அந்த ராமாயண வீட்டை கொடுத்து விட்டுத் தனியாக சோனாக்ஷி கடலை பார்த்தபடி உள்ள பிரம்மாண்ட வீட்டில் சிங்கிளாக பொருட்களை எடுத்து வைக்க முடியாமல் கஷ்டப்படுவதாக பதிவிட்டுள்ளார். எங்கே உங்க பாய் ஃபிரெண்ட் அவருக்காகத்தானே இந்த வீடு அவரையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம் தானே என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சமீபத்தில், சோனாக்ஷி நடித்த தாஹத் வெப்சீரிஸ் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது.