மும்பை: தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்த ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்களுக்கும் அவரது அம்மா ஸ்ரீதேவிக்கும் தொடர்பு இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
பாலிவுட்டின் யங் ஹாட் குயினாக வலம் வரும் ஜான்வி கபூர் அவரது அம்மாவை போல தென்னிந்திய படங்களிலும் ஆர்வம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஹாட்டாக போட்டோக்களை வெளியிட்டுள்ள ஜான்வி கபூருக்கு ஏகப்பட்ட ஹார்ட்டின்களும் லைக்குகளும் குவிந்து வருகின்றன.
எலுமிச்சை பழம்போல: மஞ்சள் நிற உடையில் அப்படியே எலுமிச்சை பழம் போல செம ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.
பால்கனியில் நின்றபடி படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் பிபியை எகிற வைத்துள்ள ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போஸ்ட்டுக்கு லட்சக் கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன.
படுக்கையில் பாவமாய்: கவர்ச்சி உடையில் கலக்கல் போஸ் கொடுத்த ஜான்வி கபூர் படுக்கையில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொடுத்துள்ள போஸை பார்த்தால் இந்த பாவமான குழந்தையா அப்படி கவர்ச்சி ஏஞ்சலாக காட்சி அளிக்கிறது என்பதை ரசிகர்கள் நம்பவே மாட்டார்கள் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.
மீண்டும் நீல நிற கட் அவுட் கவுனில் கலக்கலாக கிளாமர் குயினாக மாறிய போட்டோக்களையும் ஷேர் செய்திருக்கிறார் ஜான்வி கபூர்.
மயிலோட மகளாச்சே: மறைந்த நடிகை ஸ்ரீதேவியை ரசிகர்கள் மயிலு என்றே 16 வயதினிலே படத்தில் இருந்தே பட்டப் பெயர் வைத்து அழைத்து வந்தனர்.
இந்நிலையில், அதனை நினைவுப்படுத்தும் வகையில், தான் தங்கியிருக்கும் ரெசார்ட் அருகே மரத்தில் மயில் ஒன்றை நிற்பதை பார்த்த ஜான்வி கபூர் அதனையும் போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மயிலோட மகளென மணிக்கொருமுறை நிரூபித்து வருகிறாரே என கலாய்த்து வருகின்றனர்.
இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என் டிஆர் நடித்து வரும் படத்திற்கு தேவரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ஜான்வி கபூர் பாலிவுட்டிலும் சில படங்களில் கமிட் ஆகி உள்ளார். கோலிவுட் பக்கம் இவர் எப்போ வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.