இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கும்
Samsung மிட் ரேஞ்சு
செக்மென்ட்டில் அதன் புதிய F54 5G ஸ்மார்ட்போனை ஜூன் 6 அன்று வெளியிடவுள்ளது. இதன் முன்பதிவு மே 30 தொடங்கிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய மேலும் சில விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Samsung Galaxy F54 Specsஇதில் ஒரு 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி O டிஸ்பிளே, 120HZ Refresh Rate, Exynos 1380 Processor வசதி, 6000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் இடம்பெறும். இப்போதெல்லாம் சாம்சங் போன் உடன் சார்ஜ்ர் இடம்பெறுவது இல்லை என்பதால் இந்த போன் உடன் சார்ஜ்ர் இடம்பெறுமா என்பது தெரியவில்லை.கேமரா வசதிகள்முக்கியமான வசதியாக இதில் மிட் ரேஞ்சு போன்களில் சிறந்த 108MP முக்கிய OIS கேமரா வசதி, பிரீமியம் Galaxy S23 சீரிஸ் போன்களில் இடம்பெறும் Astrolapse வசதி, இரவு நேரத்திலும் சிறந்த செல்பி கேமரா, Fun Mode, Nightography வசதி, Monster Shot 2.0 போன்ற வசதிகள் இடம்பெறும்.விலை எதிர்பார்ப்புகள்இந்த போனை நாம் மே 30 முதலே Flipkart மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்காக 999 ரூபாய் முன்பதிவு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை முன்பதிவு செய்பவர்களுக்கு 2,000 ஆயிரம் ரூபாய் சலுகை கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்