சென்னை : ஆபாச வீடியோ காட்டி அதே மாதிரி பண்ண சொல்லி அடித்தார் என்று விஷ்ணுகாந்த் மீது அடுக்கடுக்கான புகாரை கூறினார்.
சீரியல் நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து கடந்த மார்ச் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் பிரிந்த இவர்கள் வீதிக்கு இழுத்து வந்து மாறி மாறி இருவரும் குற்றம்சாட்டி வருகின்றன.
அந்த நினைப்பு தான் : கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய சம்யுக்தா, எனக்கு 22 வயசுதான் ஆகுது அவருக்கு 32 வயசு ஆகுது. அப்போதும் என்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என்று அவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால், திருமணம் ஆனதும் அவர் மொத்தமா மாறிவிட்டார். அவருக்கு 24 மணிநேரமும் அவருக்கு அந்த நினைப்புத்தான் என்றார்.
விஜே ரவியுடன் காதல் : இதையடுத்து, சம்யுக்தா கூறிய குற்றச்சாட்டை மறுத்த விஷ்ணுகாந்த், சம்யுக்தா என்னை காதலிக்கும் முன்பே, ரவி என்பவரை காதலித்து வந்ததாகவும், இவர்கள் இருவரும் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் ஒன்றாக சேர்த்து நடித்தவர்கள் என்றும், திருமணம் ஆனபோதும் இருவரும் அடிக்கடி சேட்டிங் செய்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டு இருந்தார்.
நல்ல குடும்பத்து பையன் : இதன்பின் விஜே ரவி, நான் சம்யுக்தாவிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை, நான் நல்ல அம்மா, அப்பாவுக்கு பிறந்தவன், நான் சம்யுக்தா கிட்ட தப்பா நடந்து கிட்டேன் என்று சொல்வதை கேட்கும் போது வியப்பாக உள்ளது. இதுவரை என்னுடன் இணைந்து நடித்த நடிகர்களிடம் நான் ஒரு நல்ல நண்பனாகத்தான் இருந்து இருக்கிறேன். ஒரு விஷ்ணுகாந்த் சொல்வது போல நான் தப்பானவனாக இருந்தது இல்லை என்றார்.
ஆபாச வீடியோவை காட்டுனார் : இதையடுத்து, மீண்டும் இன்ஸ்டாகிராம் நேரலையில் கண்ணீருடன் பேசினார். அதில், விஷ்ணுகாந்திற்கு என் மேல பாசமே இல்லை, என்னை அவர் பெண்ணாகவே பார்க்கல, ஒரு பொம்மை மாதிரிதான் பார்த்தார். தினமும் ஆபாச வீடியோவை காட்டுவார். அதில் செய்வது போல செய்ய சொல்லுவார். வலிதாங்க முடியாம நான் கத்தினால், என்னை வாயை மூடச் சொல்லி அடிப்பார் என்று கண்ணீருடன் பேசினார்.
கண்ணீர் பேட்டி : இதை வெளியில் சொன்னால் எனக்குத்தான் அசிங்கம் என்று வெளியில் சொல்லாமல் இருந்தேன். ஆனால், நான் செய்யாத ஒரு தப்புக்காக கெட்ட பெயர் வாங்கிட்டேன். நான் விஷ்ணுகாந்தை ஏன் பிரிந்து வந்தேன் அப்படிங்குறதே மறைஞ்சிருச்சு, இப்போ என்னுடைய கடந்த கால வாழ்க்கை தான் பெரிய விஷயமாக பேசுறாங்க என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.