வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பியொங்யாங்: வடகொரியா நாட்டின் முதல் உளவு செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
வடகொரியா தனது முதல் உளவு செயற்கோள் ராக்கெட் முலமாக நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் இந்த ராக்கெட் பல பிரச்சனைகளை சந்தித்து நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.
ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை அடுத்து தென் கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் பொது மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ராக்கெட் ஏவப்பட்டதில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டதால் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
நீண்ட தூர ஏவுகனை தொழில் நுட்பத்தை வடகொரியா பயன்படுத்துவதற்கு ஐ.நா சபை தடை விதித்துள்ளது. ஐ.நா சபையின் உத்தரவை மீறி நீண்ட தூர ஏவுகனை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடகொரியா உளவு செயற்கை கோளை விண்ணில் ஏவ முயற்சி செய்தது தோல்வியில் முடிந்தது.
முன்னதாக வடகொரியா நாட்டில் உளவு செயற்கை கோள் ஏவப்படுவதை அறிந்து ஜப்பான் அரசு வடகொரியாவின் உளவு செயற்கை கோள் ஜப்பான் எல்லைக்குள் வந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement