'மார்கழி திங்கள்' படப்பிடிப்பில் திடீர் விபத்து.. உயிர் தப்பிய படக்குழு: சுசீந்திரன் பகீர் தகவல்.!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘மார்கழி திங்கள்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பாரதிராஜாவின் ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அவரது மகன் மனோஜ். இவர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் மனோஜ் பாரதிராஜா, சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தில் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பழனி அருகேயுள்ள கணக்கம்பட்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து குறித்து சுசீந்திரன் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.

Leo: ‘லியோ’ படத்தில் இந்த பிரபல நடிகரின் தம்பியா.?: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் லோகேஷ்.!

அதில், பழனி அருகே ‘மார்கழி திங்கள்’ படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் புயல் காற்றுடன் கன மழை பெய்தது. அப்போது சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய கேமராவை அங்குள்ள தோட்டத்தில் வைத்து படமாக்கி கொண்டிருந்தோம். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென புயல் மற்றும் மழை பெய்தது. இதனால் நாங்கள் அனைவரும் மிகவும் சிரமப்பட்டோம்.

Vishnukanth: பொய்யான நரக வாழ்க்கை: விஷ்ணுகாந்த் வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை.!

சென்னையிலிருந்து கொண்டு வந்திருந்த லைட்டுகள் அனைத்தும் கீழே விழுந்து விட்டது. ஒரு லைட் மீது இடி விழுந்துவிட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக ஐந்து லைட்மேன்கள் உயிர் தப்பினார்கள். இந்த நேரத்தில் படக்குழுவினர் அனைவரும் உதவியாக இருந்தனர் என அந்த வீடியோவில் பேசியுள்ளார் சுசீந்திரன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.