Thailand Open 2023: புதன்கிழமை (2023 மே 31) நடைபெற்ற தாய்லாந்து ஓபன் 2023 பேட்மிண்டன் போட்டிகளில் ஆடவர் பிரிவில், இந்தியாவின் லக்ஷ்யா சென், முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், 21-23, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வாங் சூ வெய்யை எதிர்த்து வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் , தைவான் வீரர் சூ வெய் வாங் ஆகியோர் மோதினார்கள். பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் சுற்றில் பின் தங்கிய லக்சயா சென் அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றினார். 21-23 , 21 -15 , 21 – 15 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வெற்றி பெற்றார்.
இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிவி சிந்து, தாய்லாந்து ஓபன் 2023 பேட்மிண்டன் போட்டிகளின் முதல் சுற்றில் தோல்வியடைந்தார். பிவி சிந்துவை கனடாவின் மிச்செல் லி 8-21, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மூன்றாவது ஆட்டத்தில் 10 நேர் புள்ளிகளைப் பெற்ற பிறகு, இந்திய வீராங்கனை வெற்றி பெற்றுவிடுவார் என்று தோன்றிய நிலையில், ஒரு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் தொடர்ந்த ஆட்டத்தில் பிவி சிந்து இறுதியில் தோல்வியைத் தழுவினார்.
மற்றுமொரு மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், கனடாவின் வென் யூ ஜாங்கை நேர் செட்களில் வீழ்த்தி அசத்தினார். கனாடாவின் வென் யூ ஜாங்கை 21-13, 21-7 என்ற கணக்கில் தோற்கடித்த சாய்னா இரண்டாவது சுற்றில் சாலிஹாவுடன் இணைந்தார்.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டிகளில் ஆடவர் பிரிவில், இந்தியாவின் லக்ஷ்யா சென், முதல் சுற்றில் தோல்வியடைந்தாலும், 21-23, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வாங் சூ வெய்யை எதிர்த்து வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.