இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கடந்தாண்டு திரைத்துறையை பொறுத்தவரை தனுஷிற்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. தொடர் தோல்விகளில் இருந்து வந்த தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.
ஒரு சிறந்த பீல் குட் படமாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தனுஷை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது மட்டுமல்லாமல் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் பிறகு தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த வாத்தி திரைப்படம் வெளியானது. இப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று நூறு கோடி வசூலித்தது.
Vijay: விஜய்யின் சம்பளம் அதிகரிக்க இவர் தான் காரணமா ?மாஸ்டர் பிளானா இருக்கே..!
இந்நிலையில் தொடர் வெற்றிகளை கொடுத்த தனுஷ் தற்போது அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் பல மொழிகளில் தயாராகும் பான் இந்திய படமாக உருவாகி வருகின்றது. இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இப்படத்திற்காக தனுஷ் தன் கெட்டப்பை டோட்டலாக மாற்றியுள்ளார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
நீளமான தலைமுடி, தாடியை வளர்த்து வேறொரு ஆளாக மாறியுள்ளார் தனுஷ். கடந்த பல மாதங்களாக தனுஷ் இந்த கெட்டப்பில் தான் வலம் வருகின்றார். என்னதான் இந்த கெட்டப் நன்றாக இருந்தாலும் ரசிகர்களுக்கு சலிப்புத்தட்டி விட்டது. தற்போது தனுஷ் ரசிகர்கள் தங்கள் நாயகனை பழைய மாதிரி பார்க்கவேண்டும் என ஆசை படுகின்றனர்.
அவ்வப்போது இணையத்தில் வெளியாகும் தனுஷின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலர், சீக்கிரம் பழைய கெட்டப்பிற்கு மாறுங்க என கமன்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தனுஷ் ரசிகர்களின் ஆசை விரைவில் நிறைவேறப்போவதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது கேப்டன் மில்லர் திரைப்படம் ஜூன் மாதம் முழுவதுமாக முடிவடைய இருக்கின்றது.
எனவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தனுஷ் தன் பழைய கெட்டப்பிற்கு திரும்பவுள்ளார். கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் தன் ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார். எனவே இப்படத்தின் வேலைகளை கேப்டன் மில்லர் படம் முடிவடைந்ததும் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படத்தின் வேலைகள் துவங்குவதற்கு முன்பே தனுஷ் கேப்டன் மில்லர் கெட்டப்பில் இருந்து விடுபட்டு புது கெட்டப்பிற்கு ரசிகர்களின் ஆசைக்கேற்ப மாறுவார் என்பது மட்டும் உறுதி.