தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் விஜய். இவரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை அதிரடி ஆக்ஷன் படமாக இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் சோஷியல் மீடியாவை அதிர விட்டு வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படத்தில் பிரபல நடிகரின் தம்பி இணைந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் கடைசியாக ‘வாரிசு’ படத்தில் நடித்தார். இந்தப்படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே ‘லியோ’ படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார் விஜய். ஆனால் இந்தப்படம் தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் இருந்தனர் படக்குழுவினர். ‘வாரிசு’ பட ரிலீசுக்கு பின்பே ‘லியோ’ பட அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனையடுத்து ‘வாரிசு’ வெளியீட்டுக்கு பின்னர் ‘தளபதி 67’ படத்தின் டைட்டிலுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ உருவாகி வருகிறது. கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி என நடிப்பு ஜாம்பவான்களுடன் அதிரடி கேங்ஸ்டர் படமாக விக்ரமை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பால் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அத்துடன் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளனர். ‘மாஸ்டர்’ படம் ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தால் ‘லியோ’ படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ். இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாதங்களுக்கு மேலாக விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
Dhanush: தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் படத்தின் கதை இதுவா.?: வெளியான செம்ம மாஸ் தகவல்.!
இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக ‘லியோ’ படத்தில் நாசரின் தம்பி ஜவஹர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் நாசரின் மூன்று சகோதரர்களில் ஜவஹரும் ஒருவர். அண்மையில் ஜிவி 2 படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் ஜவஹர். இதனையடுத்து தற்போது இவர் ‘லியோ’ படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
‘லியோ’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 68’ படத்தினை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Vanitha Vijaykumar: அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் இல்லை: வனிதா விஜயகுமார் அதிரடி.!