கோயம்புத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலைசெய்து விட்டு, ‘சாணி பவுடர்’ உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மத்துவராயபுரம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், செல்வபுரத்தைச் சேர்ந்த 20 வயதான ரமணி என்ற இளம்பெண்ணை வேளாங்கண்ணியில் வைத்து கடந்த 6 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சஞ்சய் தனது கல்லூரித் தோழியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதால், தம்பதிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று மனைவியைக் கீழே தள்ளி சஞ்சய் துப்பட்டாவால் கழுத்தை நெறித்ததில் ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தந்தை புகார் அளித்ததால் கணவன், அவரது தந்தை மற்றும் தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.