வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‘ஓ.டி.டி., எனப்படும் இணைய வழி பொழுதுபோக்கு தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது, புகையிலை எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தியேட்டரில் படங்கள் திரையிடப்படுவதற்கு முன்பும், இடைவேளைக்கு பின்பும், புகையிலை மற்றும் சிகரெட் புகைப்பதன் தீமைகள் குறித்த விளம்பரம் ஒளிபரப்பப் பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆண்டு தோறும் மே 31ம் தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, ‘ஓ.டி.டி., தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது, சிகரெட் எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்’ என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.
இது குறித்து, சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ஓ.டி.டி., தளங்களில் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பும், இடைவேளைக்கு பின்பும், 30 வினாடிகளுக்கு, சிகரெட் புகைப்பதன் தீமை குறித்த விளம்பரத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
மேலும், சிகரெட் புகைக்கும் காட்சிகள் வரும் போது, ‘சிகரெட் புகைப்பது புற்றுநோயை உண்டாக்கும்; அது உயிரைக் கொல்லும்’ என்ற எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் புகையிலைப் பொருட்களின் பிராண்டுகளை காட்சிப்படுத்தக் கூடாது. இதை மீறும் படக் குழு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement