உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா, தனது நாட்டிலும் கடுமையான குண்டு வீச்சுகளை எதிர்கொண்டுள்ளது. பெல்கோரட் என்ற எல்லைப்புற நகரில் உக்ரைன் படைகள் வான்வழியாக குண்டுகளை வீசி சரமாரித் தாக்குதல் நடத்தின.
ஆளில்லாத டிரோன்கள் மூலமும் குண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் ஒரு டிரோன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது விழுந்து நொறுங்கியதால் பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 குடியிருப்பு வளாகங்கள், 4 தனி வீடுகள், அரசு நிர்வாகக் கட்டடங்கள் பள்ளி மருத்துவமனை போன்ற இடங்கள் இதில் சேதம் அடைந்திருப்பதாக பெல்கோரட் ஆளுநர் தெரிவித்துள்ளார். மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல் நடத்த உக்ரைன் முயற்சித்ததாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியது.