Today Headlines 1 June 2023: இன்றைய தலைப்பு செய்திகள்… சிலிண்டர் விலை குறைப்பு முதல் சீமான் கணக்கு முடக்கம் வரை!

தமிழ்நாடு

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார்.விமான நிலையத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தின் மூலமாக 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்மூலம் 5,000-க்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை விமர்சித்த அமைச்சர் KN நேரு!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியாம்பாறை பகுதியில் சட்ட விரோதமாக நடந்து வந்த கொட்டாங்குச்சிகளில் இருந்து கார்பன் தயாரிக்கும் ஆலையை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.பொறியியல் கல்லுரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்காக 2,11,417 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், நடப்பாண்டில் இன்னும் 4 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், தற்போதே எண்ணிக்கை நெருங்கியுள்ளது.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த பலரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் ஏர்வாடியில் செய்யது சுல்தான் ஒலியுல்லா தர்காவின் 849வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் அவர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். தன்னுடைய மகன் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க வைத்திலிங்கம் சென்றதாக கூறப்படுகிறது.போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்துடனான முத்தரவு பேச்சுவார்த்தை ஜூன் 9ம் தேதி மீண்டும் நடத்த முடிவாகியுள்ளது.

இந்தியா

மல்யுத்த வீராங்கனைகளின் புகார்கள் மீது பாரபட்சமின்றி விசாரணை தேவை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.ஏழைகளை தவறாக வழிநடத்துவதே காங்கிரஸின் கொள்கை என்று பிரதமர் மோடி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

உலகம்

கேமரா ஃப்ளாஷ் மூலம் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஜெர்மனியில் உள்ள ரஷ்ய நாட்டு தூதரகங்களில் ஐந்தில், நான்கை மூட ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ரஷ்யாவில் உள்ள ஜெர்மனி தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்த ரஷ்ய அரசின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம்

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 84.50 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் 1,937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 376வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.