முழுமையான உற்பத்தி நிலையை எட்டியுள்ள கேடிஎம் 390 டியூக் படம் தற்பொழுது கசிந்துள்ளது. மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் அம்சங்களை பெற்றதாக மேம்பட்ட புதிய என்ஜின் பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த தலைமுறை டியூக் 2023 நவம்பரில் EICMA அரங்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது அதை விட விரைவில் சந்தைக்கு விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2023 KTM 390 Duke
முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடுகளை கொண்ட சேஸ் உடன் புதிய 390 டியூக் பைக்கில் எல்இடி ஹெட்லைட் மேம்படுத்தப்பட்டு, டேங்க் எக்ஸ்டென்ஷன் நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்டு விற்பனையில் உள்ள மாடலை விட ஸ்போர்ட்டிவ் தன்மை கொண்டதாக காட்சியளிக்கின்றது.
TFT டிஸ்பிளேவுடன் கூடிய ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி பெற்ற கிளஸ்ட்டர் பை டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றை பெற உள்ளது.
புதிய 390 டியூக் பைக்கில் 399cc புதிய லிக்யூடு கூல்டு என்ஜின் பெறலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தொடர்ந்து 373cc என்ஜின் பயன்படுத்தப்படுமா என எந்த உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை. புதிய என்ஜின் கூடுதல் பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தலாம்.
2023 கேடிஎம் 390 டியூக் பைக்கின் விலை ரூ.3.20 லட்சத்தை எட்டலாம்.