கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரயிலில் மர்ம நபர் தீ வைத்தார். இதில் முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பொதுப்பெட்டி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கட்டுப்படுத்தியதால் தீ பிற பெட்டிகளுக்கு பரவவில்லை. பயணிகள் யாரும் பெட்டியில் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் தப்பியோடும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
மோப்ப நாய் வந்து மோப்பம் பிடித்து, அருகிலுள்ள புதர் பகுதிக்குள் ஓடி சென்று நின்றது. தேசிய புலனாய்வு படையினரும் இது பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இதே ரயில் ஓடிக் கொண்டிருந்த போது தீ வைக்கப்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாயினர். இதுதொடர்பாக ஷாருக் ஷைபி என்பவர் கைது செய்யப்பட்டார்.