இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில்
இம்மாதம் வெளியாகவுள்ள
Nothing Phone 2 ஸ்மார்ட்போனில் இடம்பெறப்போகும் முக்கியமான வசதிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் முந்தய Nothing Phone 1 விட ‘Eco Friendly Smartphone’ என்று Nothing நிறுவனம் தெரிவித்துள்ளது.
Nothing Phone 2 விவரம் (Nothing Phone 2 Specs)
இந்த ஸ்மார்ட்போன் Nothing Phone 1 ஸ்மார்ட்போனை விட கூடுதலான 0.15 இன்ச் ஸ்க்ரீன் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்பிளே OLED ஸ்க்ரீன் இடம்பெறும்.
இதில் 200mAh கூடுதல் பேட்டரி அளவு உள்ளது. அதன்படி இப்போது வெளியாகப்போகும் Nothing Phone 2 ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய 4700mAh பேட்டரி கொண்டிருக்கும். Nothing Phone 1 ஒரு 4500mAh பேட்டரி மட்டுமே கொண்டிருந்தது. இதில் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப் வசதி இருக்கும்.
இந்த போனில் 90% மறுஆக்கம் செய்யப்பட்ட ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 80% பிளாஸ்டிக் பாகம் மறுஆக்கம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் பெறப்பட்டுள்ளது. இதன் அலுமினியம் சைடு பிரேம் 100% மறுஆக்கம் செய்யப்பட்ட பொருட்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பேக்கேஜ் பாக்ஸ் 60% மறுஆக்கம் செய்யப்பட்ட பைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 ஆண்டுகள் Android OS, 4 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வசதி கிடைக்கும். இதன் டிசைன், கேமரா பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதன் விலை 40 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கும். கடந்த ஆண்டு அந்த நிறுவனம் Nothing Phone 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில்
பட்ஜெட் விலையான
32,999 ஆயிரம் ரூபாய்க்கு பிளிப்கார்ட் இணையத்தில் அறிமுகம் செய்தது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்