இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Srilanka: இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக தங்கள் நாட்டிற்கு வருமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த்நாடே கொண்டாடும் நடிகராக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் அவரை வைத்து தங்கள் நாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடிவு செய்துள்ளது இலங்கை அரசு. இதையடுத்து இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் டாக்டர் டி. வெங்கடேஸ்வரன் போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார்.சூரிரசிகரின் வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற சூரிஇலங்கைஅந்த சந்திப்பு குறித்து வெங்கடேஸ்வரன் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ரஜினிகாந்த் இலங்கைக்கு வந்தால் சுற்றுலாத்துறை மேம்படும். ராமாயணத்துடன் தொடர்புடைய புனித தலங்கள், மற்றும் பிற பாரம்பரிய கலாச்சார மற்றும் மத சின்னங்களை பார்வையிடலவும் இலங்கைக்கு வருமாறு ரஜினிகாந்தை அழைத்திருக்கிறோம் என்றார்.
வருகிறேன்நான் நடித்து வரும் பட வேலையை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வருகிறேன் என வெங்கடேஸ்வரனிடம் தெரிவித்துள்ளாராம் ரஜினிகாந்த். முன்னதாக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ரஜினியை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தன. இந்நிலையில் இலங்கையும் அழைப்பு விடுத்திருக்கிறது. இலங்கை துணை தூதர் ரஜினியை சந்தித்து பேசியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஜெயிலர்ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் இந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
Ajith: லியோ, விடாமுயற்சி, ஜெயிலர், கேப்டன் மில்லர், அயலான், கங்குவா, துருவநட்சத்திரம் அப்டேட் வருது
லால் சலாம்தன் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அந்த படத்தில் மொய்தீன் பாயாக வருகிறார். அண்மையில் மும்பையில் நடந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரஜினி ரசிகர்களை கவர்ந்தது. லால் சலாம் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ் நடிக்கிறார். தான் கபில் தேவுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் ரஜினி.
Rajinikanth: மிரள வைத்த ரஜினி: ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்கும் தலைவர் ரசிகர்கள்
தலைவர் 170ஜெயிலர், லால் சலாமை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். லால் சலாமை போன்றே தலைவர் 170 படத்திலும் இஸ்லாமியராக நடிக்கிறார். போலி என்கவுன்ட்டர்களை எதிர்த்து போராடும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ்தலைவர் 170 படத்தில் வில்லனாக நடிக்குமாறு சீயான் விக்ரமிடம் தான் கேட்டார்களாம். அதற்காக அவருக்கு ரூ. 50 கோடி சம்பளம் தர முன்வந்தார்கள். ஆனால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரமுக்கு விருப்பமில்லையாம். இதையடுத்தே அர்ஜுனை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். ஞானவேல் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினி. அந்த படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிக்கிறார். தலைவர் 171 படத்தில் கமல் ஹாசன் கவுரவத் தோற்றத்தில் வரவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
Kamal Haasan: நண்பர் ரஜினியிடம் பேசிவிட்டேன்: குட் நியூஸ் சொன்ன கமல் ஹாசன்