மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்தி ஆகிய இனக் குழுவினருக்கு இடையில் நடந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்துள்ளது. இது மாநிலம் தழுவிய அளவில் பரவி தேசத்தையே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. போலீசார் தடியடி, கலவரக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, பொது சொத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டது என நிலைமை கைமீறி சென்றது.
மணிப்பூரில் அமித் ஷா
இங்கு முதலமைச்சர் என்.பைரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார். மேற்கொண்டு கலவரம் நடக்காமல் தடுக்கும் வகையில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுனில் கனுகோலு: இனிமே இவர் தான் நம்பர் ஒன்… காங்கிரஸ் வியூகமும், சித்தராமையா முடிவும்!
ஆயுத வேட்டை தீவிரம்
ஆயுதங்கள் யாராவது வைத்திருந்தால் உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பான தேடுதல் வேட்டை நடத்தப்படும். அப்போது வீடுகளில் இருந்து ஆயுதங்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநில ஆளுநர், முதலமைச்சர், காவல்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இனக் குழுக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவான ஆலோசனை நடத்தினார்.
நீதி விசாரணைக்கு உத்தரவு
இதையடுத்து மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆறு வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதி குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: டோட்டலா மாறுது… இனிமே கம்மி தானாம்… ரயில் பயணிகள் ஏமாற்றம்!
இழப்பீடும், சிறப்பு குழுவும்
காயம் அடைந்தவர்கள், சொத்துகளை இழந்தவர்களுக்கான நிதியுதவிகள் நாளைய தினம் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இந்த சூழலில் கலவரத்தில் காயமடைந்த நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 3 குழுக்கள் மணிப்பூரில் முகாமிட்டுள்ள நிலையில், புதிதாக 5 குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.