இறுதிச்சடங்கின்போது அசைந்த இளைஞரின் உடல்… அலறி ஓட்டம்பிடித்த உறவினர்கள்! – ம.பி `திடுக்'

மத்தியப் பிரதேசம் மாநிலம், மெரேனா பகுதியில் வசித்தவர் ஜீது பிரஜாபதி என்ற இளைஞர். இவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னை இருந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை மாலை மயங்கி விழுந்திருக்கிறார். அருகில் இருந்தவர்கள் அவரின் மூக்கு, வாய்ப் பகுதிகளில் விரல் வைத்து, சுவாசத்தை சோதித்திருக்கிறார்கள். அவர் சுவாசமற்று இருந்ததால், அவர் உயிருடன் இல்லை என அவரது குடும்பத்தினர் முடிவுசெய்திருக்கிறார்கள். மேலும், அவருடைய இறுதிச்சடங்குகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவரின் உடலை தகனம் செய்வதற்காக உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் சாந்தி தாமு என்ற பகுதிக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்கு இறுதிச்சடங்குகள் தொடங்கியவுடன், அவருடைய உடல் அசையத் தொடங்கியிருக்கிறது. உடனே அங்கிருந்தவர்கள் பயந்து அலறி ஓடியிருக்கின்றனர். அதன் பிறகு சில இளைஞர்கள், அவரின் உடலை அங்கிருந்து வேறோர் இடத்துக்கு மாற்றிவிட்டு, மருத்துவருக்குத் தகவலளித்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவர் பரிசோதித்துவிட்டு, அவருடைய இதயம் இயங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். உடனே அவர் மேல் சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

Loading…



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.