போபால்: மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் நேற்று திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை கார் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் புதுமணத் தம்பதியும் அடங்குவர். இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகின்றன.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.