புவனேஸ்வர்: ஒடிஷாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-1 அணு ஆயுத ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது,
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: நடுத்தர தொலைவு அக்னி-1 அணு ஆயுத ஏவுகணை 2023, ஜூன் 1 அன்று ஒடிசாவின் ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் இருந்து ராணுவ படைப்பிரிவால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. மிக உயர்ந்த நிலையிலிருந்து இந்த ஏவுகணை இலக்குகளைத் தாக்கும் திறன் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்தன. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Story first published: Thursday, June 1, 2023, 20:53 [IST]