கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் காரணமே இன்று முடக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பாஜக அரசுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு சிலர், டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக பேசியதாக சீமானின் ட்விட்டர் கணக்கை நீக்கியதாகவும், ஒரு சிலர், சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் கோரிக்கையின்படி நீக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர்.
குறிப்பாக, நாம் தமிழர் சீமான் மற்றும் அவருக்கு ஆதரவான பலரது கணக்குகளை முடக்கக்கோரி சென்னை காவல்துறை ட்விட்டர் நிறுவனத்துக்கு கோரிக்கை அனுப்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். இது மிகுந்த பரபரப்பை கிளப்பியது. காரணம், சீமானுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
அதில்
‘நாம் தமிழர் சீமான், மே 17 திருமுருகன் காந்தி ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் சீமானின் கணக்கை முடக்க சென்னை காவல்துறைதான் காரணம் என்று சவுக்கு சங்கர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
அதற்கு சென்னை காவல்துறை பதில் விளக்கம் அளித்துள்ளது. சென்னை காவல்துறை ட்விட்டர் பதிவில் ‘ நாம் தமிழர் சீமான், மே 17 இயக்கம் ஆகியோரது ட்விட்டர் கணக்குகளை நீக்க சென்னை மாநகர காவல்துறை சார்பில் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எனவே, பொய் செய்தி பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சீமான் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். முதல் ட்வீட் போட்டுள்ள சீமான் ‘ புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோள்களை முறித்து, குரல் வளையை நெறிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கோன்மை செயல் வெட்ககேடானதாகும்.
கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.