மும்பை: நடிகை ஜெனிலியா தனது மகனுக்கு உதட்டிலேயே முத்தம் கொடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ள நிலையில், நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
துஜே மேரி கஸம் எனும் படத்தில் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு ஜோடியாக இந்தியில் அறிமுகமான ஜெனிலியா அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக பாய்ஸ் படத்தில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், பாலிவுட் பக்கம் போகாமல் இருந்த ஜெனிலியா ரித்தேஷ் தேஷ்முக் உடனான காதல் காரணமாக 2012ல் அவரை திருமணம் செய்துக் கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.
ஹாசினியை மறக்க முடியுமா?: பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமப்புத்திரன் மற்றும் வேலாயுதம் என தமிழில் பல படங்களில் நடித்தாலும் ரசிகர்களுக்கு எப்போதுமே சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக நடித்த ஜெனிலியா தான் இப்போ வரைக்கும் ஃபேவரைட்.
அப்படியொரு குறும்புத்தனம் கொண்ட ஒரு காதலி வேண்டுமென ஏகப்பட்ட இளைஞர்கள் இப்போதும் ஏங்கி தவிக்கின்றனர். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு ரசிகர்களை பெரியளவில் பாதித்துள்ளது.
திருமணத்துக்கு பின்பும் நடிப்பு: நடிகை ஜெனிலியா 2012ல் திருமணம் செய்துக் கொண்டாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தவில்லை. இந்தி படங்களில் கேமியோவாக சில வருடங்கள் தலை காட்டி வந்த ஜெனிலியா 2020ம் ஆண்டு இட்ஸ் மை லைஃப் எனும் படத்தில் மீண்டும் ஹீரோயினாக நடித்தார்.
தொடர்ந்து, இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வரும் ஜெனிலியா தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார். ஆனால், மீண்டும் தமிழ் சினிமா பக்கம் மட்டும் தலைகாட்டுவது இல்லை என்கிற முடிவில் உள்ளார் என்றே தெரிகிறது.
குழந்தைக்கு உதட்டில் முத்தம்: 2014ம் ஆண்டு மூத்த மகன் ரியானும் 2016ல் இளைய மகன் ராஹேலும் பிறந்தனர். குழந்தைகளை பாதுகாத்து வளர்த்து வரும் பாசமான அம்மாவான ஜெனிலியா தனது இரண்டாவது மகன் ராஹேல் ஜூன் 1ம் தேதி பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், அவனுடன் கொஞ்சும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதில், ஒரு சில போட்டோக்களில் மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுத்துள்ளார் ஜெனிலியா. பல நடிகைகளும் சமீப காலமாக தங்கள் குழந்தைகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து ட்ரோல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது நடிகை ஜெனிலியாவும் அந்த லிஸ்ட்டில் சிக்கிக் கொண்டார். நடிகை ஜெனிலியாவை நெட்டிசன்கள் பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.