பாட்னா, பீஹாரில், அனுமதியின்றி தொடர்ச்சியாக வருடக்கணக்கில் விடுப்பு எடுத்த அரசு டாக்டர்கள் 60 பேருக்கு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் பலர், முன் அறிவிப்பின்றியும், அனுமதியின்றியும் தொடர்ச்சியாக விடுப்பு எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஒரு சில டாக்டர்கள் ஒரு ஆண்டுக்கும் அதிகமான நாட்கள் விடுப்பு எடுத்ததும், அதற்கு முறையான அனுமதி பெறாததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மாநில சுகாதார அமைச்சகம் இது குறித்து விளக்கம் கேட்டு, 60 டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அனுமதியின்றி விடுப்பு எடுத்தது குறித்து, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் விளக்கம் அளிக்காவிட்டாலோ அல்லது அளிக்கப்படும் விளக்கம் ஏற்க முடியாததாக இருந்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர் சட்ட விதிமுறைகளின்படி, அனுமதியின்றி தொடர்ச்சியாக விடுப்பு எடுப்போரை பணி நீக்கம் செய்ய முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement