நடுத்தர தொலைவு அக்னி – 1 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒடிசாவின் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், எஸ்.எப்.சி.(SFC) ரக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி-1 அணு ஆயுத ஏவுகணை, மிக உயர்ந்த நிலையில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், ஏவுகணையின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்தன என்றும் குறிப்பிட்டுள்ளது.
அணு ஆயுதங்களைத் தாங்கி 5,000 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லும் திறன் கொண்ட அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணையை, இந்தியா கடந்த டிசம்பர் மாதம் வெற்றிகரமாக சோதனை செய்தது.