டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து பேசியுள்ளார் சீமான்.
சீமான்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் 20 பேரின் டிவிட்டர் கணக்குகள் நேற்று திடீரென முடக்கப்பட்டன. இதே போல் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியின் டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டது. சட்ட கோரிக்கையை ஏற்று இந்தியாவில் இவர்களின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படுவதாக டிவிட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது.
கண்டனங்கள்சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெறிக்கும் செயல் இது என தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். முதல்வர் ஸ்டாலின், கருத்தை கருத்தால் எதிர்கொள்வதுதான் அறம் என்றார். இதே போல் கவிஞர் வைரமுத்துவும் சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
புதிய டிவிட்டர் கணக்குஇதனை தொடர்ந்து செந்தமிழன் சீமான் என்ற புதிய டிவிட்டர் கணக்கை தொடங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். முதல் பதிவாக தனக்கு ஆதரவாய் குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் சீமான். இதனிடையே ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த சீமான், திடீர் என தனது டிவிட்டர் கணக்கை முடக்கி விட்டதாக கூறினார்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவுமேலும் தனது டிவிட்டுகள் குற்றப்பதிவு என வந்ததால் முடக்கி விட்டதாக கூறுகிறார்கள், ஆனால் முடக்கும் அளவுக்கு குற்றமான டிவிட்டை தான் பதிவிடவில்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் குறித்து பதிவிட்ட சில நிமிடத்தில் தனது கணக்கு முடக்கப்பட்டதாகவும் எந்த காரணமும் சொல்லவில்லை என்றும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.பழிவாங்கும் நடவடிக்கைதன்னுடைய பதிவுகள் வரம்பை மீறிவிட்டதாக சொல்லியிருக்கலாம், ஆனால் எதுவுமே சொல்லாமல் முடக்கி விட்டார்கள் என்ற சீமான், செங்கோல் வைத்து அற முறையில் ஆட்சி செய்ய போவதாக கூறுகிறார்கள், ஆனால் கருத்து சுதந்திரம் இல்லை என்றும் பேசினால் கழுத்தை நெறிப்பேன் என்பதும் சரியானது அல்ல என்றார். மேலும் இது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை என்றும் சீமான் மத்திய அரசை சாடினார்.