தமிழகத்தில் மே மாத கோடை விடுமுறையை கொண்டாட பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மே மாத கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் 7-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் குடும்பத்தோடு தங்களது சொந்தங்களுக்கு பயணிப்பார்கள்.
எனவே கூட்டணி விசிலை குறைக்கவும் பொதுமக்கள் எளிதாக பயணிக்கவும் சென்னைக்கு கூடுதலாக 2200 அரசு பேருந்துகளும் மற்ற மாவட்டங்களுக்கு 500 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.