இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கின்றார். அஜித்தின் 62 ஆவது படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கவுள்ளார் என கடந்த ஜனவரி மாதமே அறிவிப்பு வெளியான நிலையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அஜித் பைக்கில் சுற்றுலா சென்றுள்ள சமயத்தில் மகிழ் திருமேனி லொகேஷன் தேடல் பணிகளை செய்து முடித்தார். தற்போது படத்தின் லொகேஷன்களை முடிவு செய்துள்ள மகிழ் திருமேனி நடிகர்களின் தேர்வில் ஈடுபட்டுள்ளார்.
Maaveeran: மாவீரன் படத்தில் என்னுடைய ரோல் இதுதான்..புட்டு புட்டு வைத்த மிஸ்கின்..!
இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றதாம். அஜித்துடன் த்ரிஷா ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் மூலம் மீண்டும் இக்கூட்டணி இணையவுள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதைத்தொடர்ந்து அனிருத் இசையமைக்கும் இப்படம் ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக இருக்கின்றதாம். எனவே அஜித் இப்படத்திற்காக செம பிட்டாக மாறி வருகின்றார். பொதுவாகவே மகிழ் திருமேனி படம் என்றாலே செம ஸ்டைலாக இருக்கும். எனவே அவர் அஜித்தை கண்டிப்பாக விடாமுயற்சி படத்தில் செம ஸ்டைலாக காண்பிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது மகிழ் திருமேனி தனது டீமுடன் புனேவில் இருக்கிறாராம். அங்கெ பிரமாண்டமான செட் அமைத்து வரும் படக்குழு அஜித்திற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கின்றதாம். அஜித் தற்போது கேரளாவிற்கு பைக் சுற்றுலா சென்றுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் அதனை முடித்துவிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கின்றார்.
முதலில் விடாமுயற்சி படத்தில் சண்டை காட்சிகள் தான் எடுக்கப்பட இருக்கின்றதாம். அதற்காகத்தான் புனேவில் மிகப்பிரமாண்டமான செட் ஒன்றை படக்குழு உருவாக்கி இருக்கின்றது. எனவே அஜித் வந்தவுடன் முதலில் சண்டை காட்சிகள் தான் படமாக்க இருக்கிறாராம் மகிழ் திருமேனி. மேலும் விடாமுயற்சி படத்தில் சண்டை காட்சிகள் தான் ஹைலைட்டான விஷயமாக இருக்கும் என்பதால் கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.