பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில், போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் கிளாரி லுவை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.. இந்த சீசனில் அவரது 30-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தது. 22 வயதான ஸ்வியாடெக் 3-வது சுற்றில் சீனாவின் வாங் ஸின்யுடன் மோதுகிறார்.
நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் வியாழன் அன்று மூன்றாவது சுற்றில் நுழைந்ததன் மூலம் 16 ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெற்றிகரமாக பாதுகாக்கும் முதல் பெண்மணி என்ற சாதனையை தக்கவைத்துக் கொண்டார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை தக்க வைக்கும் உத்வேகத்துடன் டென்னிஸ் மட்டையை கையில் எடுத்திருக்கும் இகா ஸ்வியாடெக் ‘நம்பர் ஒன் சூறாவளி’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
பிரெஞ்சு ஓபனில் வியாழன் அன்று நடந்த இரண்டாவது சுற்றில், இத்தாலிய எட்டாம் நிலை வீரரான ஜானிக் சின்னர் இரண்டு மேட்ச் புள்ளிகளைத் தவறவிட்டு, ஜெர்மனின் டேனியல் அல்ட்மேயரிடம் தோற்று வெளியேறினார்.
உலகத் தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கும் ஆல்ட்மேயர், நான்காவது செட்டில் இரண்டு முறை மேட்ச் பாயிண்ட்டுகளைத் தடுத்து, இறுதியில் 6-7 (0/7), 7-6 (9/7), 1-6, 7-6 (7/4) என வெற்றி பெற்றார்.ஐந்து மணி நேரம் 26 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான போட்டியாக இது இருந்தது.
இந்த ஜோடி கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் முதல் சுற்றில் ஐந்து செட் ஆட்டத்தில் விளையாடியது, அப்போது சின்னர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ட்மேயர் அடுத்து கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொள்கிறார்.
உலகின் முதல் நிலை வீராங்கனையான கிளாரி லியுவை 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்திய இகா ஸ்வியாடெக், நான்காவது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வெல்லத் தவறினால், போலந்து நட்சத்திரம் ஒரு வருடத்தில் முதல் முறையாக தனது உலக நம்பர் ஒன் தரவரிசையை இழக்க நேரிடும்.
விம்பிள்டன் சாம்பியனும், தர வரிசையில் நான்காம் நிலையில் இருக்கும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவை வீழித்தினார். அதேபோல, அமெரிக்காவின் கைலா டே, 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மேடிசன் கீஸ்சை வென்றார்ர்.
அதேபோல, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை அடைந்த ரஷியாவின்மிரா ஆன்ட்ரீவா 6-1, 6-2 என்ற நேர் செட்டில், பிரான்சின் டைனே பாரியை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்த வெற்றி மூலம், 2005-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனில் இளம் வயதில் மூன்றாவது சுற்றை எட்டியவர் என்ற சிறப்பை 16 வயதான மிரா ஆன்ட்ரீவா பெற்றுள்ளார்.