இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Isaignani Ilaiyaraaja: இளையராஜாவின் பிறந்தநாள் அன்று நடந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இளையராஜாதேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த ஞானதேசிகன் தான் இன்று உலக மக்கள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா. அந்த இசைஞானி இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இசைக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தங்களுக்கு பிடித்த இளையராஜாவின் பாடல் வீடியோக்களை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று காலை நடந்த ஒரு விஷயத்தை உங்களுடன் ஷேர் செய்கிறோம்.சுனைனா”இந்த மாதிரி கேள்வி கேட்காதீங்க” கடுப்பான நடிகை சுனைனா!பெங்களூர்கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கும் பிரபல நிறுவனத்தின் அலுவலகத்திற்கு இன்று காலை வழக்கம் போன்று ஊழியர்கள் வரத் துவங்கினார்கள். அவரவர் இருக்கையில் அமர்ந்த பிறகு ரொம்ப சீரியஸாக வேலையை செய்யத் துவங்கினார்கள். சிலர் காலையிலேயே டென்ஷனுடன் வந்து சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள். பல மொழி பேசும் ஊழியர்கள் வேலை செய்யும் அலுவலகம் அது. இந்நிலையில் அந்த அலுவலகத்தில் இருக்கும் ஒரு தமிழர், ஏய் இன்று இளையராஜாவுக்கு பிறந்தநாள் என சொன்னார்.
தீம் மியூசிக்அந்த நபர் கூறியதை கேட்ட மற்றொரு தமிழரோ, புன்னகை மன்னன் படத்தில் வந்த தீம் மியூசிக்கை தன் செல்போனில் சத்தமாக ஒலிக்கச் செய்தார். அந்த தீம் மியூசிக் முடியும் வரை அலுவலகத்தில் யாரும் அசையவில்லை. தீம் மியூசிக் முடிந்ததும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு நபர் தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தார். வேலை நேரத்தில் என்னங்கடா சத்தமா மியூசிக் என கேட்பாரோ என நினைத்தால் நெகிழ வைத்துவிட்டார்.
Kamal Haaasan:மாமன்னன் படம் பார்த்துவிட்டேன், முதல் விமர்சனத்தை வெளியிட்ட கமல்
அதிசயம்உங்கள் செல்போனில் இருந்து வந்த இசை எந்த படம் என எனக்கு தெரியாது, அது யாரின் இசை என்றும் தெரியாது. ஆனால் இன்று காலை மன அழுத்தத்துடன் வந்தேன். இந்த இசையை கேட்டதும் என் டென்ஷன் எல்லாம் பறந்துவிட்டது. இந்த நாள் எனக்கு இனிய நாளாகிவிட்டது. நான் சந்தோஷமாக போய் என் இடத்தில் வேலை பார்ப்பேன். காலையிலேயே இந்த அருமையான இசையை எங்களை கேட்கச் செய்ததற்கு நன்றி என்றார் அந்த மேற்கு வங்க நபர்.
மகிழ்ச்சிமேற்கு வங்க நண்பர் சொன்னதை கேட்ட தமிழ் நபரோ, என்ன சத்தம் இந்த நேரம் பாடலை ஒலிக்கச் செய்தார். எஸ்.பி.பி. குரலில் அந்த பாடலை கேட்ட தமிழகத்தை சேர்ந்த ஊழியர்கள் கண்கள் கலங்கிவிட்டது. இசைஞானியின் இசையும், எஸ்.பி.பி.யின் தேன் குரலும் வேற லெவல் காம்பினேஷன். எஸ்.பி.பி. இல்லை என்றே நம்ப முடியவில்லை. இறந்தும் நம்மை மகிழ்விக்கிறார் என தமிழ் ரசிகர்கள் நெகிழ்ந்து கூறினார்கள்.
இசைஇளையராஜாவின் இசையால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஊழியர்கள் அனைவர் முகத்திலும் ஒரு ஸ்மைலை பார்க்க முடிந்தது. மனதில் இருந்த பாரம் எல்லாம் காணாமல் போய்விட்டது. இசைஞானி அவரின் பிறந்தநாளில் நமக்கு ஒரு அற்புதமான பரிசு கொடுத்துவிட்டார். எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் அவர் இசையை கேட்டால் சட்டென ரிலாக்ஸ் ஆகிவிடலாம். நீங்களும் இசைஞானியின் இசையோடு இந்த நாளை சந்தோஷமாக எதிர்கொள்ளுங்கள்.