அமைச்சர் செந்தில் பாலாஜி வட்டாரத்தை சுற்றி இன்று 8 ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் எந்தெந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதான தகவல் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
சோதனை தொடர்ந்து நடந்து வருவதால் முடிந்த பின்னர் முழு விவரம் தெரிய வரும். அதில் யார் யார் பொறி வைக்கப்பட்டனர். அதில் யார் யாருக்கு சொந்தமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன? இதில் அமைச்சரின் தொடர்பு உள்ளதா? கரூர் புறவழிசாலையில் அசோக்கின் மனைவி பெயரில் கட்டப்பட்டு வரும் வீட்டின் பணிகள் முடக்கப்பட்டுள்ளதா? ஆகிய தகவல்கள் தெரிய வரும்.
<p>sengottaiyan advocate karur</p>
இந்த நிலையில் கரூர் லாரிமேடு பகுதியில் அமைந்துள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் நேற்று முதல் சோதனை நடந்து வருகிறது. இவர் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்.
பினாமி பெயரில் பல சொத்துக்களை இவர் வாங்கியதாகவும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் சகோதரர் அசோக் மற்றும் அவரது நண்பர்களுடன் நெருங்கிய தொடர்பில் செங்கோட்டையன் இருந்த வந்ததால் இவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்களாம். இந்த நிலையில் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெரிய பெட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று எடுத்து சென்றுள்ளனர்.
அந்த பெட்டியில் இருந்தது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் கரூர் ஐடி ரெய்டு குறித்து தொடர்ந்து ட்வீட் போட்டு வரும் சவுக்கு சங்கர் இதுபற்றி கூறியுள்ளார். அதில் ‘ இரண்டு ஆண்டுகளாக செந்தில் பாலாஜிக்காக அனைத்து நிலங்களையும் வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் செங்கோட்டையன் வீட்டில் இருந்து இரண்டு பெட்டி நிறைய ஆவணங்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்தனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்கள் பினாமி பெயரில் வாங்கிய ஆவணங்கள் செங்கோட்டையனிடம் சிக்கின’ என பற்ற வைத்துள்ளார் சவுக்கு சங்கர்.
முன்னதாக கரூர் – கோவை நெடுஞ்சாலையில் உள்ள கொங்கு மெஸ் உணவகத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் அந்த சீலை அகற்றிவிட்டு சோதனையை தொடங்கினர். இதனால் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், கொங்கு மெஸ் உணவகத்தின் பார்ட்னரான ஜீவா என்பவருக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதில், கொங்கு மெஸ் உணவகத்துக்கு தொடர்புடைய எந்த ஒரு ஆவணத்தையும், சொத்துக்களையும் அத்துமீறி எடுத்து செல்லக்கூடாது என்றும் மீறினால் இரண்டாண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.