அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை… எங்கெல்லாம் அடிச்சு நொறுக்கப் போகுது?

தென்மேற்கு பருவமழை அடுத்த 48 மணிநேரத்தில் தொடங்க உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழைவழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு தாமதமாகி வருகிறது. தற்போது வரை கேரளா மற்றும் கர்நாடாக மாநிலங்களின் கடலோர பகுதிகளில் பருவ மழைக்கு முந்தைய மழைதான் பெய்து வருகிறது. இருப்பினும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.​ கேரளாவை அச்சுறுத்தும் புயல்… காத்திருக்கும் கனமழை!​
அடுத்த 48 மணி நேரத்தில்மேலும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் வங்கக் கடல் பகுதியில் அதற்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு அரபிக் கடல், மாலத்தீவு, குமரி முனை, தெற்கு வங்கக் கடல், கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் வடகிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகளுக்கு முன்னேற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.​ https://tamil.samayam.com/photogallery/news/mp-senthilkumar-enjoys-the-holiday-in-maldives/photoshow/100696360.cms​கேரளாவில் ஜூன் 4மேலும் தென்மேற்குப் ஜூன் 4 ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் எனறும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. ஜூன் 1 தேதியே தொடங்க தொடக்க தென்மேற்கு பருவ மழை 3 நாட்கள் தாமதமாக வரும் 4ஆம் தேதி கேரளாவில் தொடங்கவுள்ளது. மேலும்
அதன் வாராந்திர வானிலை முன்னறிவிப்பில், திங்கட்கிழமைக்குள் தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
​ கவிதை மொழியில் இளையராஜாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!​காற்றழுத்த தாழ்வு பகுதிஇதன் தாக்கத்தால், அடுத்த இரண்டு நாட்களில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் இது வடமேற்கு, தெற்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளை பாதிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக கேரளா, லட்சத்தீவுகள், கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
​ உறவாடிக் கெடுக்க பார்க்கிறார் டிகே சிவக்குமார்… தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!​தமிழகத்தில் மழைதிங்கள்கிழமை வரை தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. கேரளாவில் வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
​ மீண்டும் மீண்டுமா… சென்னையில் நேற்றை விட இன்று அதிகமாக இருக்கும்… எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்!​ஆலங்கட்டி மழைமேலும் மேற்கு இமயமலைப் பகுதியில் லேசானது முதல் மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.​ சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.