Takkar – டக்கர் ரெயின்போ திரளில்..சிம்பு குரலில் வெளியானது அட்டகாசமான பாடல் வீடியோ

சென்னை: Takkar (டக்கர்) சித்தார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் டக்கர் படத்தில் இடம்பெற்ற ரெயின்போ திரளில் பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இயக்கவில்லை. நடிகராக இருந்தாலும் அவரால் ஒரு மெகா ஹிட்டை இத்தனை வருடங்களாக கொடுக்க முடியவில்லை

கப்பல் இயக்குநர்: இந்திய அளவில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். அவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் கார்த்திக் ஜி க்ரிஷ். இவர் தனது முதல் படமாக வைபவ் உள்ளிட்டோரை வைத்து கப்பல் என்ற படத்தை இயக்கினார். படம் வியாபார ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியாக பாஸிட்டிவ் விமர்சனத்தையே பெற்றது. குறிப்பாக கார்த்திக்கின் மேக்கிங் நல்லபடியாக இருப்பதாகவும், நம்பிக்கைக்குரிய இயக்குநராக வருவார் என்றும் பேசப்பட்டது.

டக்கர்: கார்த்தி ஜி க்ரிஷ் இப்போது டக்கர் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சித்தார்த், யோகிபாபு, திவ்யான்ஷா, அபிமன்யூ சிங் உள்ளிட்டோ நடித்திருக்கும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சித்தார்த்துக்கு இந்தப் படம் பெரும் வெற்றியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார். அதேபோல் கப்பல் படம் நன்றாக இருந்ததன் காரணமாக டக்கர் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டக்கர் ட்ரெய்லர்: டக்கர் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. பணக்காரனாக ஆசைப்படும் ஒரு இளைஞராக சித்தார்த் நடித்திருக்கிறார். மேலும், பல ஆக்‌ஷன் காட்சிகளும், நகைச்சுவை காட்சிகளும் ட்ரெய்லர் முழுக்க நிரம்பியிருந்தது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதற்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கின்றனர். படமானது உலகம் முழுக்க திரையரங்குகளில் ஜூன் 9ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு பாடல்: இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் ரெயின்போ திரளில் என்ற பாடலின் வீடியோ வெளியாகியிருக்கிறது. பாடலை சிம்புவும், ஆண்ட்ரியாவும் இணைந்து பாடியிருக்கின்றனர். அறிவரசன் என்பவர் பாடலுக்கான வரிகளை எழுத நிவாஸ் கே.பிரசன்னாவின் அட்டகாசமான இசை தாளம் போட வைக்கிறது. வரிகளும் சிறந்த முறையில் இருக்கின்றன. இப்போது இந்தப் பாடலின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதனை அதிகம் பகிர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.