திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்று வழங்குவதற்கு மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் கட்டாய கட்டண வசூலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து வெளியான வீடியோவில் அந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் 4 பேர் ஐடிஐ சேர மாற்றுச் சான்றிதழ் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்க பள்ளி சென்றுள்ளனர். அவர்கள் பயின்றது கொரோனா காலம் என்பதால் அனைவரும் தேர்ச்சி என்று கல்வித்துறை அறிவித்து சான்றிதழ் வழங்கியிருந்தது.
ஆனால் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முந்தைய தேர்வில் பெற்ற சராசரி மதிப்பெண் அடிப்படையில் பள்ளி நிர்வாகமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கி வருகிறது. மதிப்பெண் சான்றிதழை பெற 4 மாணவர்கள் சென்ற நிலையில் ஒரு மாணவருக்கு 500 ரூபாய் அல்லது ஒவ்வொரு மாணவனும் ஏ4 பேப்பர் பண்டல்கள் 2 வாங்கி வருமாறும் லஞ்சம் கேட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்திலும், சமுக வலைதளங்களிலும் லைரலாகி வருகிறது.