வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‛‛ டில்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் ”, என 1983ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் கவலையையும் தொந்தரவையும் கொடுத்துள்ளது. கடுமையாக உழைத்து பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளது கவலையை ஏற்படுத்துகிறது.
இந்த பதக்கங்கள் ஆனது பல வருட முயற்சி, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தை உள்ளடக்கியது. அவை, உங்களுக்கு மட்டும் அல்லாமல் நாட்டிற்கும் பெருமை தேடி த்தந்தது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
உங்களின் பிரச்னைகள் மற்றும் குறைகள் கேட்கப்பட்டு அவை விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டத்தின் ஆட்சி நிலைபெறட்டும். இவ்வாறு அவர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.
1983ம் ஆண்டு ஜூன் 25 ல் நடந்த உலக கோப்பை பைனலில் விளையாடிய இந்திய அணியில் கபில் தேவ், கவாஸ்கர், அமர்நாத், ஸ்ரீகாந்த், சையத் கிர்மானி, யஷ்பால் சர்மா, மதன்லால், பல்விந்தர் சிங் சந்து, சந்தீப் பாட்டீல், கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பைனலில், மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அணி முதல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement