சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு நேற்றுடன் (ஜூன் 1) நிறைவுபெற்றது.
இதனைத் தொடர்ந்து லால் சலாம், தலைவர் 170 ஆகிய படங்களில் ரஜினி நடிக்கவுள்ளார்.
அதேபோல் லோகேஷ் கனகரஜ் – சூப்பர் ஸ்டார் ரஜினி கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாகவும் தெரிகிறது.
அதன்படி, தலைவர் 171 தான் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில், இன்னொரு சம்பவம் செய்ய அவர் ரெடியாகிவிட்டதாக தெரிகிறது.
சூப்பர் ஸ்டாரின் கடைசி சம்பவம்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169வது படமாக உருவாகி வருகிறது ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததாக நேற்று சன் பிக்சர்ஸ் அபிஸியலாக அறிவித்திருந்தது. இதனால் விரைவில் தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் லோகேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் சூப்பர் ஸ்டார். ரஜினியின் தலைவர் 171 தான் அவரது கடைசிப் படமாக இருக்கும் முதலில் சொல்லப்பட்டது. ரஜினியே தனது கடைசிப் படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க வேண்டும் ஆசைப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், ரஜினியின் கடைசிப் படம் தலைவர் 171 இல்லையென்றும், அதன்பிறகும் ஒரு படத்தில் நடிக்க அவர் ரெடியாக இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கடைசிப் படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினி – ஷங்கர் கூட்டணியில் ஏற்கனவே சிவாஜி, எந்திரன், 2.O ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகின.
சிவாஜி படத்தை ஃபேன்பாய் சம்பவமாக டைரக்ட் செய்திருந்த ஷங்கர், எந்திரன், 2.O படங்களை சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இயக்கியிருந்தார். இதில், 2.O பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தான் 2.O உருவாகியிருந்தது. இதனால், 2.O படத்தின் அடுத்த வெர்ஷனாக 3.O படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். இந்தியன் 2 ஷூட்டிங் முடிந்ததும் சூர்யாவுடன் இணைந்து வேள்பாரி படத்தை ஷங்கர் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரஜினி தனது கடைசி படத்தை ஷங்கர் இயக்க வேண்டும் என விரும்புவதால் வேள்பாரி தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது. மேலும், 3.O படத்தை லைகா அல்லது சன் பிக்சர்ஸ் தயாரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் 171 படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் தான் தலைவர் 172 பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.