புவனேஸ்வரம்: கோல்கட்டாவில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஓடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்த ரயில் போலீசார் மற்றும் மீட்பு படையினர், தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு 50 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த நேரம் இரவு என்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஒடிசா அரசு அவசர எண் அறிவிப்பு
91-6782 262 286 என்ற அவசர கட்டுப்பாட்டு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு விரைவு
விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் மூன்று பிரிவு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையின் நான்கு பிரிவும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மருத்துவமனைகள் தயார்நிலையில்
பாலசோர் மற்றும் கட்டாக் மாவட்ட மருத்துவமனைகள் விபத்தில் சிக்கியோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயார்நிலையில்இருக்கும் படி மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சென்னை கட்டுப்பாட்டு அறை தொலை பேசி எண் அறிவிப்பு
ரயில் விபத்தை அடுத்து தெற்குரயில்வே சென்னை செனட்ரல் ரயில் நிலைத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பர்களையும் அறிவித்துள்ளது.சென்னை கட்டுப்பாட்டு அறை எண் 044 25330952 ,25330953,25354771என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது.
ஒடிசா விபத்து :ஹவுரா அவசர கட்டுப்பாட்டு எண் 033- 263 822 17
ரயில் விபத்து முதல்வர்கள் ஆலோசனை
ரயில் விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஓடிசா மாநில முதல்வருடன் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மாநில அமைச்சர் விரைவு
விபத்து நடைபெற்ற இடத்திற்கு ஒடிசா மாநில முதல்வர் அறிவுறுத்தலின் படி மாநில முதல்வர் பிரமிலா மாலிக் விரைந்துள்ளார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்