திருப்பதி முழுமையான தகுதி உள்ள வாகனங்கள் மட்டுமே இனி திருப்பதி மலைப்பாதையில் அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் அலிபிரி வழியாக மலைப்பாதையில் செல்கின்றனர். கடந்த 2 வாரங்களாக மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.எனவே இதுதொடர்பாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேற்று மலைப்பாதையில் ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம், ”திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் பாதுகாப்புக்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே திருமலைக்கு வரும் […]