நண்பர்கள் ஆதரவில் நடைபெற்ற தசரா இயக்குனர் திருமணம்

கடந்த மார்ச் மாதம் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் தசரா. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று, நூறு கோடிக்கு மேல் வசூலித்தது இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் திருமணம் அவரது சொந்த ஊரான கோதாவரிகனியில் நடைபெற்றது. தசரா பட நாயகன் நானி, திருமண தம்பதியின் புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீகாந்த் ஓடேலா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்திலும் பணியாற்றியுள்ளார். அதைத்தொடர்ந்து தசரா பட வாய்ப்பு கிடைத்து முதல் படத்திலேயே வெற்றியும் பெற்றுள்ளார். இவர் உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இவரது சக நண்பரான சிவாவின் தங்கை என்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மற்ற நண்பர்கள் பேச்சுவாக்கில் கூறியுள்ளனர்.

அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்ட ஸ்ரீகாந்த் ஒடேலா மணமகளின் பெற்றோர் சகோதரர் ஆகியோர் மனமுவந்து திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வரை காத்திருந்தாராம், இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த திருமணம் கைகூடியதன் பின்னணியில் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் நண்பர்கள் பங்களிப்பு அதிகம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.