இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
செம பிசிரஜினி தன் 71 ஆவது வயதிலும் செம பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றார். இதற்கு இடையில் ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகளையும் துவங்கியுள்ளார் ரஜினி. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் ரஜினி பிசியாக நடித்து வருகின்றார்
எதிர்பார்ப்புசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் மீது ரஜினி அதீத நம்பிக்கை வைத்துள்ளாராம். சமீபகாலமாக வெற்றிப்படங்களை கொடுக்காத ரஜினி ஜெயிலர் படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு கண்டிப்பாக திரும்புவோம் என்ற எதிர்பார்ப்பில் ரஜினி இருக்கின்றார். அதற்கு ஏற்றாற்போல படமும் அமைந்துள்ளதால் ஜெயிலர் கண்டிப்பாக வெற்றிபெறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது
வித்யாசம்ரஜினி சமீபகாலமாக வித்யாசமான படங்களை கொடுக்கும் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகின்றார். நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த ரஜினி தற்போது ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இதைதொடர்ந்து உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஞானவேலின் படத்தில் நடிக்கும் ரஜினி இதையடுத்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்திலும் நடிக்க இருக்கின்றார். இவ்வாறு ரஜினி கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு படங்களை இயக்கும் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருவது ரசிகர்கள் முதல் கோலிவுட் வட்டாரத்தை சார்ந்தவர்கள் வரை ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றது. எனவே ரஜினி தன் திரைப்பயணத்தில் அடுத்த ரவுண்டிற்கு தயாராகிவிட்டார் என தெரிவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
எந்திரன்இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பாபா திரைப்படம் திரையில் ரீரிலீசானது. இதைத்தொடர்ந்து தற்போது எந்திரன் படமும் புதுப்பொலிவுடன் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷங்கரின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் வெளியான எந்திரன் படத்தில் ரஜினி வசீகரன் மற்றும் சிட்டி என இரு ரோலில் நடித்து மிரட்டியிருப்பார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு எந்திரன் திரைப்படம் புதுப்பிக்கப்பட்டு சன் நெஸ்ட் என்ற OTT தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. எனவே இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் புதுப்பொலிவுடன் வெளியாகப்போகும் எந்திரன் படத்தை காண ஆவலாக இருக்கின்றனர்